மார்ச் மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி 3 முறை தமிழகம் வரவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதையொட்டி கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
அந்தவகையில் பிரதமர் மோடி கடந்த மாதம் 23 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக மார்ச் மாதத்தில் 3 முறை தமிழகம் வரவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், வருகிற மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் மோடி, மதுரை திருப்பரங்குன்றம் வரவுள்ளதாகவும் அங்கு நடைபெறும் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மார்ச் 6 ஆம் தேதி வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும் மார்ச் 11 ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிமுக - பாஜக கூட்டணி ஓரளவு இறுதியாகியுள்ள நிலையில் மேலும் சில கட்சிகளைச் சேர்க்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கூட்டணியில் தேமுதிகவை மார்ச் 1 ஆம் தேதி பிரதமர் வரும்போது எதிர்பார்க்கலாம் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
எனவே பிரதமரின் வருகைக்கு முன்னதாகவே கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
PM Modi is coming to tamilnadu; Three trips in march month
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மார்ச் 31-ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி! ரூ.5,295 கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை: மார்ச் 1 திருப்பரங்குன்றம் கோயிலில் வழிபாடு!
மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

மார்ச்சில் இருமுறை தமிழ்நாடு வரும் மோடி!
வீடியோக்கள்

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை


