மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு! தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்கள்!!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
மாநிலங்களவை.
மாநிலங்களவை.(கோப்பிலிருந்து...)
Updated on
2 min read

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

நாட்டில் தமிழகம், மேற்கு வங்கம் உள்பட 10 மாநிலங்களில் 37 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வருகிற மார்ச் 16 ஆம் தேதி நடைபெறும் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 இடங்கள் காலியாகின்றன.

தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், பிகார், சத்தீஷ்கர், ஹரியாணா, ஹிமாசலப் பிரதேசம், தெலகானா உள்ளிட்ட இடங்களில் மொத்தமாக 37 இடங்கள் காலியாகின்றன. இதில், 17 எம்பிக்கள் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியும், மீதமுள்ள 20 எம்பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் 4 ஆம் தேதியும் நிறைவடைகிறது.

தமிழ்நாட்டில் உள்ள மாநிலங்களவை எம்பிக்கள் என். ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, தம்பிதுரை, ஜி.கே. வாசன், பி. செல்வராசு உள்ளிட்டோரின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடையவுள்ளது.

மகாராஷ்டிரத்தில் டாக்டர் பகவத் கிஷன்ராவ் கான், டாக்டர் பௌசியா தஹ்சீன் அகமது சதுர்வேதி, பிரியங்கா விக்ரம் பவார், சரத்சந்திர கோவிந்தராவ் பாட்டீல், தைரியஷில் மோகன் பாட்டீல், ரஜனி சோக்ராவ் அத்வாலே, ஒடிசாவில் மம்தா மோகந்தா, முசிபுல்லா கான், சுஜீத் குமார், நிரஞ்சன் பிஷி, மேற்கு வங்கத்தில் சகேத் கோகலே, ரிதாப்ரதா பானர்ஜி, விகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா, மௌசம் நூர், சுப்ரதா பாஷி, அஸ்ஸாமில் ராமேஷ்வர் தெலி, புவனேஷ்வர் காலிதா, அஜித்குமார் பூயான், பிகாரில் அமரேந்திர தாரி சிங், பிரேம் சந்த் குப்தா, ராம்நாத் தாக்குர், உபேந்தர குஷ்வாகா, ஹரிபன்ஷ் நாராயண் சிங், சத்தீஷ்கரில் கவி தேஜ்பால் சிங் துளதி, பூலோ தேவி நேதம், ஹரியாணாவில் கிர்ண் சௌதரி, ராம் சந்தர் ஜங்காரா, ஹிமாசலப் பிரேதசத்தில் இந்து பாலா கோஸ்வாமி, தெலங்கானாவில் டாக்டர் அபிஷேக் மனு சிங்கவி, சுரேஷ் ரெட்டி உள்ளிட்டோரின் பதவிக்காலம் நிறைவடையவுள்ளது.

மாநிலங்களவைத் தேர்தல் அட்டவணை
மாநிலங்களவைத் தேர்தல் அட்டவணை

மாநிலங்களவைத் தேர்தலுக்கான அறிவிப்புகள் வருகிற பிப். 26 ஆம் தேதி வெளியாகிறது. அதைத் தொடர்ந்து மார்ச் 5 ஆம் தேதி வேட்புமனுக்கள் தாக்கலுக்கான கடைசி நாளாகும். மார்ச் 6 ஆம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுவைத் திரும்ப பெற மார்ச் 9 ஆம் தேதி கடைசி நாள்.

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மார்ச் 16 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து அன்று மாலையே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தமிழ்நாட்டில் திமுக சார்பில் 4 எம்.பிக்களையும், அதிமுக சார்பில் 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும்.

மாநிலங்களவை.
மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக விமானங்களை குவித்த அமெரிக்கா! ஈரானுக்கு மிரட்டல்!
Summary

The Election Commission of India has announced biennial elections to the Council of States (Rajya Sabha) to fill 37 seats from 10 states, with polling scheduled for 16 March 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com