பேரவையில் புதன்கிழமை இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின்போது, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசும்போது, 2011-இல் முதல்வராக கருணாநிதி இருந்தபோது மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து வந்த அதிமுக ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. 7.5 சதவீத மருத்துவ இடஒதுக்கீட்டை பேரவையில் நிறைவேற்றி 3 மாதங்கள்ஆகியும் அதற்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காதபோது அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. திமுகவின் அழுத்தம் காரணமாகவே இந்த ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது.