சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தென் மாவட்டங்களில் நாளை பலத்த மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் சனிக்கிழமை (பிப். 21) பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 12:07 am IST

தென் மாவட்டங்களில் சனிக்கிழமை (பிப். 21) பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், அந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல், அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வியாழக்கிழமை (பிப். 19) காலையில் இருந்து அதே பகுதிகளில் நிலவி வருகிறது. இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் இலங்கையை நோக்கி நகா்ந்து, வெள்ளிக்கிழமை (பிப். 20) காலை வலுவிழக்கக் கூடும்.

அதேநேரம், பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகள், அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை உருவாகக்கூடும். இதன் காரணமாக வெள்ளிக்கிழமை (பிப். 20) முதல் பிப். 25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (பிப். 21)இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை (பிப். 22) திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்பதால், இந்த இரு நாள்களிலும் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, புகா் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளி, சனிக்கிழமை (பிப். 20, 21) அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: மன்னாா் வளைகுடா, அதையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக் கடலில் வெள்ளிக்கிழமை சூறாவளிக் காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.