நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விழுப்புரம் மாவட்டத்துக்கு பிப்.21ல் உள்ளூர் விடுமுறை!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

News image

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம். - கோப்புப்படம்

Updated On :19 பிப்ரவரி 2026, 1:51 pm IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித் திருத்தேரோட்டத்தையொட்டி, பிப்ரவரி 21-ஆம் தேதி (சனிக்கிழமை), விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் மாசித் தேர்த் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பிப்.21-ஆம் தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதையொட்டி பிப்.21- ஆம் தேதி (சனிக்கிழமை) மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாளில் அரசின் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும்.

மாணவ, மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு இந்தத் தேதியில் நிர்ணயிக்கப்பட்டிருப்பின், அந்தத் தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் என அவர் தெரித்துள்ளார்.

Summary

Local holiday declared on the occasion of the Melmalaiyanur Angalaman Temple Carriage;

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.