படம் பிரச்னை, சிபிஐ விசாரணை என தவெகவிற்கு மத்தியில் ஆளும் பா.ஜ.க அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டது என்று கட்சியின் கொள்கை பரப்புச் செயலர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தமிழக வெற்றிக் கழகத்திற்கு மதுரை மட்டுமல்லாது தமிழக முழுவதிலும் பெருகிவரும் ஆதரவால் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தவெக பிடிக்கும்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை முடிவு. இதனை முதல் மாநாட்டிலேயே விஜய் அறிவித்தார். கூட்டணிக்கு கட்சிகள் வருவார்கள் என எதிர்பார்த்து அதனை அறிவிக்கவில்லை. இதனை எந்த கட்சியும் சொல்லவில்லை, சமூக நீதி அடிப்படையில் செயல்படும் தவெக சொல்லி இருக்கிறது.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமடைந்து இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, திமுக ஆட்சியின் மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கும் நேரத்தில் தோல்வி அடையும் கட்சியோடு தேமுதிக சேர்ந்து இருப்பதால் அவர்களும் தோல்வி அடைவார்கள்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து அழைத்து விடுக்கப்படவில்லை என திருமாவளவன் கருத்தை மறுத்தார்.
கூட்டணி குறித்த முடிவுகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் எடுப்பார். தமிழ்நாடு 90 சதவீத மக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள், இளைஞர்களை அரசியல் நோக்கி இழுத்தது தமிழக வெற்றிக் கழகம்தான்.
திமுக பிப்ரவரி 22ஆம் தேதி தான் தேர்தல் கூட்டணி குழு அமைப்பது தொடர்பாக தெரிவித்தது. ஆனால் அவசரமாக தேமுதிக உள்ளே கொண்டு வந்ததன் காரணம் என்ன? தேர்தல் பயம் திமுகவிற்கு வந்துவிட்டது என்பதை இது காட்டுகிறது.
ஆளும் திமுகவிற்கு கூட்டங்கள் நடத்த உடனடியாக அனுமதி கிடைக்கிறது. ஆனால் தமிழக வெற்றிக் கழகத்திற்கு நூற்றுக்கணக்கான விதிமுறைகள், அனுமதி மறுப்பு என தடைகளை ஆளும் கட்சியினர் செய்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் மாநாட்டிலேயே கொள்கை எதிரி, அரசியல் எதிரி என இரண்டு ஆளும் கட்சிகளை அறிவித்துவிட்டார். பாஜக பல்வேறு அழுத்தங்களை கொடுக்க முயற்சி செய்தது. படம் பிரச்னை, சிபிஐ விசாரணை என அழுத்தம் கொடுத்து வருகிறது. மதவாத சக்தியுடன் கூட்டணியில்லை என ஏற்கெனவே தலைவர் அறிவித்திருக்கிறார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் அது அறிவிக்கப்படும்", எனக் கூறினார்.
Summary
After months of studied restraint, the actor-politician’s party accuses the Centre of using CBI prob.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
திமுக தாரைவாா்த்ததை தவெக மீட்டுள்ளது: உயா் சிறப்பு மருத்துவ இட விவகாரத்தில் அமைச்சா் அருண்ராஜ் விளக்கம்

காவிரி பிரச்னை: கா்நாடக முதல்வரிடம் பேச தயங்குவது ஏன்?நயினாா் நாகேந்திரன் கேள்வி

சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நேரம் கொடுக்க முடியாது! நயினார் நாகேந்திரன் விமர்சனம் | BJP

பாஜகவின் 'பி' டீம் திமுகதான்: அமைச்சர் அருண்ராஜ்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




