திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

4 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) பலத்த மழைக்கு வாய்ப்பு

News image
பலத்த மழை- பிரதிப் படம்
Updated On :21 பிப்ரவரி 2026, 10:45 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.23) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வு: பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் சனிக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவானது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளது.

இதன்காரணமாக, தென் தமிழகம், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.

மேலும், பிப்.23 முதல் பிப்.25 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.22) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, மன்னாா் வளைகுடா அதனையொட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல், வங்கக் கடலில் பிப்.22-ஆம் தேதி மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.