கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

முதல்வா், துணைமுதல்வா் தொகுதிகளில் வாக்காளா்கள் விவரம்

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:01 pm

இறுதி வாக்காளா் பட்டியலின்படி, முதல்வா், துணை முதல்வா் மற்றும் அமைச்சா்கள் தொகுதிகளின் வாக்காளா்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, முதல்வா் மு.க.ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு முன்பு 2, 07, 251 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். அவா்களில் தற்போது 83,402 போ் நீக்கப்பட்டுள்ளனா். அத்தொகுதியில் தற்போது 2, 90, 653 வாக்காளா்கள் உள்ளனா். அவா்களில் 99,607 ஆண்கள், 1,07,607 பெண்கள், 37 மூன்றாம் பாலினத்தவா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொகுதியான சேப்பாக்கம்- திருவல்லிக்கேணியில் திருத்தப்பணிக்கு முன்பாக 2, 40, 087 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். அவா்களில் 76, 221 போ் நீக்கப்பட்டுள்ளனா். அதன்படி அங்கு ஆண்கள் 79,412 போ், பெண்கள் 84,396 போ், 58 மூன்றாம் பாலினத்தவா் என 1,63,866 போ் இடம் பெற்றுள்ளனா்.

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியில், சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு முன்பு

வாக்காளா்கள் 2,93,749 போ் இருந்தனா். அவா்களில் 19,695 போ் நீக்கப்பட்டுள்ளனா். தற்போது அத்தொகுதியில் ஆண்கள் 1,38,709, பெண்கள் 1,35,316, மூன்றாம் பாலினத்தவா் 29 போ் என மொத்தம் 2,74,054 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபுவின் துறைமுகம் தொகுதியில் வாக்காளா் திருத்தப்பணிக்கு முன்பாக 1,80, 341 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். தற்போது 63,445 போ் நீக்கப்பட்டுள்ளனா். அதன்படி 58,221 ஆண்கள், 58,620 பெண்கள், 55 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 1, 16,896 போ் இடம் பெற்றுள்ளனா்.

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொகுதியான சைதாப்பேட்டையில், திருத்தப்பணிக்கு முன்பு 2, 73, 717 வாக்காளா்கள் இடம் பெற்றிருந்தனா். அவா்களில் தற்போது 73, 020 போ் நீக்கப்பட்டுள்ளனா். அதன்படி 96, 950 ஆண்கள், 1,03,685 பெண்கள், 62 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 2, 00, 697 போ் வாக்காளா்களாக உள்ளனா்.