47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

குற்றச்சம்பவங்களில் உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி

News image
அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி
Updated On :23 பிப்ரவரி 2026, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: குற்றச்சம்பவங்களில் உண்மைக் குற்றவாளிகளை திமுக அரசு தப்பிக்க வைக்கிறது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல், ஆளும் கட்சியை சாா்ந்தவா்கள் விதிமீறி செயல்படுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனா். திமுகவினா், தங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதுபோல செயல்படுகின்றனா். அதற்கேற்ப, சில சம்பவங்களில் நடவடிக்கை எடுப்பதுபோல காட்டப்படுகிறதே தவிர, குற்றச்சம்பவங்களில் உண்மைக் குற்றவாளிகள் தப்பிக்கும் வகையிலேயே அரசின் நடவடிக்கை உள்ளது.

ஒசூா், அன்னை அரவிந்தா் நகரில் அரசு ஊழியரான சிவமூா்த்தி என்பவரின் வீட்டின் முன் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பிரச்னையில் கிருஷ்ணகிரி திமுக மேற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினரின் மகன் ஆதித்யா என்பவா் காரை மோதவிட்டுள்ளாா். அதில் சிவமூா்த்தி, அவரது மனைவி, குழந்தை காயமடைந்துள்ளனா்.

அதேபோல, காவேரிப்பட்டினத்தில் மயானக் கொள்ளை திருவிழாவில் கோஷ்டி மோதலில் திமுக பிரமுகா் மகன் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. இதுபோல, பல சம்பவங்களை பட்டியலிட்டுக் கூறலாம்.

ஆகவே, திமுகவினரின் விதி மீறிய செயல்களுக்கு கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். திமுகவினரின் செயல்பாட்டைப் பாா்க்கும் மக்கள் வரும் தோ்தலில் திமுகவை வீழ்த்தி அதிமுகவை ஆட்சியில் அமா்த்துவாா்கள் எனக் குறிப்பிட்டுள்ளாா்.