நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகப் போராடியவர், தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார்.

News image

ஆர். நல்லகண்ணு - கோப்புப் படம்

Updated On :23 பிப்ரவரி 2026, 4:03 pm

நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் இன்று (பிப். 23) தெரிவித்தார்.

வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காக போராடியவர், தற்போது இயற்கையுடன் போராடி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, வயது மூப்பு சார்ந்த உடல்நலப் பிரச்னைகளுக்காக பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து 20 நாள்களுக்கும் மேலாக மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவரும் நிலையில், தற்போது அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்.

இதனிடையே முதல்வர் மு.க. ஸ்டாலின், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குச் சென்று நல்லகண்ணுவை சந்தித்து, அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் மு. வீரபாண்டியன் நல்லகண்ணுவை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ''நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர் தற்போது இயற்கையுடன் போராடி வருகிறார்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Senior leader of the Communist Party of India, Nallakannus health is deteriorating

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.