இன்று இந்தியா வருகிறாா் டிரம்ப் மகள்இன்று 14 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇளையராஜா இசை நிகழ்ச்சி: மெட்ரோ ரயிலில் இலவசம் பயணம்நிதியாண்டில் ரிசா்வ் வங்கி இருப்பு நிலை ரூ.91.97 லட்சம் கோடிபோா்க் கால பாலியல் வன்முறை: ஐ.நா. கருப்புப் பட்டியலில் முதல்முறையாக இஸ்ரேல், ரஷிய படைகள்!விசாரணை முடிந்து 3 மாதங்களில் தீா்ப்பு: உயா்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
/

கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்வி

வேலூர் பிரசாரக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேச்சு...

News image

தவெக தலைவர் விஜய்

Updated On :23 பிப்ரவரி 2026, 1:33 pm IST

கரூர் விஷயத்தில் என் மீது பழி ஏன் போட்டீர்கள்? என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார்.

வேலூரில் மக்கள் சந்திப்பு மற்றும் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் பேசுகையில்,

"எனக்கொரு ஒரு புதிய நண்பர் கிடைத்துள்ளார். அது யாரு தெரியுமா? முதல்வர் அவர்கள்தான். 'எனக்கு யாருமே எதிரிகள் இல்லை, அனைவரும் நண்பர்கள்தான்' என்று சொன்னார் முதல்வர்.

அப்படியிருக்க, கரூர் விஷயத்தில் ஏன் என் மீது பழி போட்டீர்கள்? உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அப்படி பேசியிருப்பீர்களா? நாங்கள் எல்லாம் உங்களுக்கு நண்பர்கள் என்றால் ஒரு நிகழ்ச்சி நடத்துவதற்கு ஒரு அனுமதியோ இடமோ ஏன் கொடுக்க மறுக்கிறீர்கள்? அனைத்தையும் நீங்களே செய்துவிட்டு அப்படியே போறபோக்கில் எதாவது பேசுகிறீர்களா?

உங்களுடைய உண்மையான நண்பர்கள் லஞ்சம், ஊழல், அரசியல் ஆதாயம். இவைகள்தான் உங்களுடைய நண்பர்கள். உங்கள் ஆட்சி தப்பான ஆட்சி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத ஆட்சி.

இங்கே சில அரசியல் கட்சிகளும் அரசியல் தலைவர்களும் சில நேரங்களில் அமைதியாக இருந்தாலே போதுமானது. இங்கு எந்த பிரச்னையும் வராது.

மாத மாதம் மின் கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டுவருவோம் என்று சொன்னீர்களே, செய்தீர்களா? பெரும்பாலான வீடுகளுக்கு 100 யூனிட் தான் மின்சாரம் செலவாகிறது. ஆனால் 2 மாதத்துக்கு ஒருமுறை கொடுப்பதால் அவர்கள் மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனை நவீன ஊழல் என்று எடுத்துக்கொள்ளலாமா?

நிறைய கிராமங்களில் பேருந்து வசதி இல்லை, மருத்துவமனை வசதி இல்லை என்பது உண்மை. வீட்டிலேயே பிரசவர் பார்க்கும் நிலைமை இருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண்களே, பாதுகாப்பு இல்லை என்றே கூறுகிறார்கள். சட்டம் - ஒழுங்கு காணாமல் போயிவிட்டது.

நாம் கேள்வியாக கேட்கிறோம். ஆனால் பதில் ஏதும் வந்தது மாதிரி தெரியவில்லை. அவரிடம் பதில் இருந்தால்தானே வரும். ஆனால் இனிமேல் பதில் சொல்ல வேண்டும்" என்றார்.

Summary

TVK vijay speech about karur incident in vellore campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.