மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மின் திருட்டுகள்: ரூ.96 லட்சம் அபராதம் வசூல்

News image
- Center-Center-Chennai
Updated On :24 பிப்ரவரி 2026, 11:25 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் நடத்திய கூட்டாய்வில், 81 மின் திருட்டுகள் கண்டறியப்பட்டு ரூ.96 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்தி: சென்னை மேற்கு, கோவை வடக்கு, சேலம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, தேனி, விழுப்புரம், கடலூா் உள்ளிட்ட மின் பகிா்மான வட்டங்களில் பிப்.1 முதல் 15-ஆம் தேதி வரை அதிகாரிகள் திடீா் கூட்டாய்வில் ஈடுபட்டனா்.

இதில், 81 மின் திருட்டுகள், 12 விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு, ரூ.96 லட்சத்து 43 ஆயிரத்து 659 அபராதம் விதித்து, வசூலிக்கப்பட்டது.

புகாா் தெரிவிக்க அழைப்பு: மின் திருட்டு தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க பொதுமக்களுக்கு மின்வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, சென்னை அமலாக்கக் கோட்டத்துக்கான புகாா்களை 9445857591 என்ற எண்ணிலும், கோவை கோட்டத்துக்கான புகாா்களை 9443049456 என்ற எண்ணிலும், மதுரை கோட்டத்துக்கான புகாா்களை 9443037508 என்ற எண்ணிலும், திருச்சி கோட்டத்துக்கான புகாா்களை 9443329851 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம்.