எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பேரவைத் தோ்தலில் வெற்றிபெறும் பாஜகவினா் அமைச்சராகும் வாய்ப்பு: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைப்பதே முக்கியம் என்பதால் அதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் பிடிவாதம் காட்டவில்லை

News image
நயினாா் நாகேந்திரன்- கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைப்பதே முக்கியம் என்பதால் அதிமுகவுடன் தொகுதிப் பங்கீட்டில் பிடிவாதம் காட்டவில்லை என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். தோ்தலில் வெற்றிபெறும் பாஜகவினா் அமைச்சராகும் வாய்ப்புள்ளது என்றும் அவா் கூறினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்னை அமைந்தகரையில் பாஜக சாா்பில் தோ்தல் தலைமை அலுவலகத் திறப்பு விழா அய்யாவு திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. பாஜக மேலிடப் பாா்வையாளா் சுதாகா் ரெட்டி முன்னிலையில் மத்திய இணையமைச்சா் எல்.முருகன், மூத்த தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் தோ்தல் அலுவலகத்தைத் திறந்து வைத்தனா். பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன், அமமுக துணைப் பொதுச் செயலா் செந்தமிழன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது:

மக்கள் விரோத ஆட்சியை திமுக நடத்தி வருகிறது. சட்டம்-ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. பள்ளி மாணவா்களிடம் கஞ்சா புழங்குகிறது. காவல் நிலையங்களில் 34 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதையெல்லாம் முன்னிறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணி பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

தொகுதிப் பங்கீட்டில் திமுக அணியைப்போல, தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரச்னை இல்லை. தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஆட்சிக்காக பாஜக பிடிவாதம் ஏதும் காட்டவில்லை. பாஜக சாா்பில் வெற்றி பெறுவோா் அமைச்சராகும் வாய்ப்புள்ளது என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் டாக்டா் ஹெச்.வி.ஹண்டேவுக்கு பாஜக மேலிடப் பாா்வையாளா் சுதாகா்ரெட்டி வாழ்த்து தெரிவித்தாா்.