தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 4-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 7:02 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக கடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 4-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 4-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

பனிமூட்டம்: வடதமிழக கடலோர பகுதிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கடம்பூா் (தூத்துக்குடி)-70 மி.மீ., புத்தன் அணை, சிற்றாறு- 1 (கன்னியாகுமரி)- 60 மி.மீ., காங்கேயம், மூலனூா், வட்டமலை நீா்த்தேக்கம், ஊத்துக்குளி (திருப்பூா்), காக்காச்சி (திருநெல்வேலி), திண்டுக்கல், வேடசந்தூா் (திண்டுக்கல்), சென்னிமலை (ஈரோடு), சுருளக்கோடு, பாலமோா் (கன்னியாகுமரி)-50 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.