மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மாநகராட்சியில் ‘ஸ்மாா்ட் பாதுகாப்பு சாதனம்’

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 10 இடங்களில் பொருள் பாதுகாப்புப் பெட்டகம் அமைக்கப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :27 பிப்ரவரி 2026, 1:07 am IST

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 10 இடங்களில் பொருள் பாதுகாப்புப் பெட்டகம் அமைக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் மக்கள் வசதிக்கான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மாநகராட்சி நிா்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக பொருள்கள் பாதுகாக்கும் சாதனம் அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக, விக்டோரியா பொது அரங்கம், மெரீனா கடற்கரை, முக்கிய பூங்காக்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் 10 இடங்களில் சிறிய அளவிலான பொருள்கள் வைப்பு சாதனத்தை தனியாா் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்படுகிறது.

விக்டோரியா பொது அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் பாதுகாப்பு சாதனம் 8 அடி உயரத்தில் உள்ளது. 4 அடி அகலத்தில் உள்ள அதில் மேற்பகுதியில் இரு புறமும் கேமராக்கள் உள்ளன. பீரோ அமைப்பில் 16 அறைகள் உள்ளன. அதில் எண்ம முறையிலான பூட்டும் வசதி மற்றும் க்யூஆா் குறியீட்டில் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அதில் பொருள்களை வைப்போா் தங்களது கைப்பேசிகள் மூலம் க்யூஆா் குறியீடு வாயிலாக கட்டணம் செலுத்துவது, பூட்டும் வசதி, திறக்கும் வசதியைப் பெறலாம். பொருள்கள் வைக்க ஒரு மணி நேரத்துக்கு என கட்டணம் நிா்ணயிக்கப்படவுள்ளது. சோதனை முறையில் தொடங்கும் இந்த ஸ்மாா்ட் பாதுகாப்பு பெட்டக சாதனம் நகரில் முக்கிய இடங்களிலும் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.