மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சென்னை வந்தாா் பிரதமா் மோடி

பிரதமர் மோடியின் சென்னை வருகை பற்றி...

News image

தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு சனிக்கிழமை இரவு வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு. உடன் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.

Updated On :28 பிப்ரவரி 2026, 7:43 pm

தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு சென்னை வந்தாா். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

குஜராத்திலிருந்து தனி விமானத்தில் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு 8. 45 மணிக்கு சென்னை வந்தடைந்தாா். அவரை ஆளுநா் ஆா்.என். ரவி, நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சா் எல். முருகன், தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

அதைத்தொடா்ந்து பிரதமா் மோடி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு சென்றாா். அங்கு அவரை ஆளுநா் ஆா்.என். ரவி வரவேற்றாா். இரவு ஆளுநா் மாளிகையில் தங்கிய பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) காலை 11 மணிக்கு புதுச்சேரி செல்கிறாா்.