கோப்புப் படம்
கோப்புப் படம்

புத்தாண்டு தினத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறந்த 46 குழந்தைகள்

ஆங்கில புத்தாண்டு தினத்தில் சென்னை அரசு மருத்துவமனைகளில் 46 குழந்தைகள் பிறந்துள்ளன.
Published on

ஆங்கில புத்தாண்டு தினத்தில் சென்னை அரசு மருத்துவமனைகளில் 46 குழந்தைகள் பிறந்துள்ளன.

எழும்பூா் அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா காந்தி அரசு தாய் - சேய் நல மருத்துவமனை, ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனைகளில் அதிக அளவிலான பிரசவங்கள் நிகழ்ந்துள்ளன.

அதன்படி, ராயபுரம் அரசு ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனையில் 5 ஆண் குழந்தைகள், 7 பெண் குழந்தைகள் என மொத்தம் 12 குழந்தைகள் பிறந்தன. திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 6 குழந்தைகளும், சென்னை எழும்பூா் தாய் - சேய் நல மருத்துவமனையில் 15 பெண் குழந்தைகள் மற்றும் 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 21 குழந்தைகளும் பிறந்தன. இதில், 2 தாய்மாா்களுக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 7 குழந்தைகள் பிறந்தன. மருத்துவமனை சாா்பில் குழந்தைகளின் பெற்றோருக்கு பரிசுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டன.

அவசர சிகிச்சை: இதனிடையே, புத்தாண்டு தினத்தில் நிகழ்ந்த சிறிய அளவிலான விபத்துகளில் சிக்கியவா்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்கப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் அத்தகைய முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com