

சென்னை: 2025ஆம் ஆண்டு நிறைவடைந்து, 2026ஆம் ஆண்டு பிறந்துவிட்டது, புத்தாண்டு விடுமுறை நாள் என்பதால், இன்று மாலை 4 மணி முதலே சென்னை மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சென்னையில் சுற்றிப் பார்க்க பல இடங்கள் இருந்தாலும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம், என்ன வேண்டுமோ வாங்கி சாப்பிடலாம், கடல் அலையில் கால் நனைக்கலாம் என குடும்பத்தினர் பலருடன் ஒன்றாக வெளியே செல்வோருக்கு ஏற்ற இடமாக இருப்பது மெரினா கடற்கரைதான்.
அந்த வகையில், புத்தாண்டு கொண்டாட ஏற்ற இடமாகவும் மக்களுக்கு முதல் தேர்வாக மெரினா கடற்கரைதான் உள்ளது. குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மாலை 4 மணி முதலே ஏராளமானோர் மெரினா கடற்கரைக்கு வரத் தொடங்கி விட்டார்கள். மெரினாவில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகக் காடசியளிக்கிறது.
நேற்று மாலை முதல் சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் இருந்ததால், இன்று மக்கள் பலரும் கடற்கரை உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்.
சென்னை மெரினா கடற்கரை மட்டுமின்றி, பெசன்ட் நகர் கடற்கரை உள்ளிட்ட இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. கடலூரில் வெள்ளி கடற்கரையிலும் மக்கள் ஏராளமானோர் திரண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.