வைகோ நடைபயணம்: மதிமுக பொதுச் செயலா் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கிவைத்தார்.
திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை திடலில் நடைபயணத்தை தொடக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின், சிறப்புரை வழங்கவுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகவுள்ள நிலையில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி திருச்சியில் இருந்து மதுரைக்கு சமத்துவ நடைபயணத்தை வைகோ மேற்கொள்கிறார்.
நாள்தோறும் 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொள்ளவுள்ள வைகோ, வருகின்ற 12 ஆம் தேதி மதுரையில் பயணத்தை நிறைவு செய்கிறார்.
திருச்சியில் நடைபெற்ற நடைபயணத்தின் தொடக்கவிழாவில், அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவின் அழைப்பிதழில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் படம் அச்சிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை புறக்கணித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.