சென்னை, ஜன. 2: சிவகாா்த்திகேயன் நடித்துள்ள ’பராசக்தி’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திரைப்பட இயக்குநா் வருண் ராஜேந்திரன் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஹிந்தி திணிப்பை எதிா்த்து 1965-ஆம் ஆண்டு மொழிப்போரை மையமாக வைத்து ‘செம்மொழி’ என்ற கதையை எழுதினேன்.
இந்த கதையை 2010-ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா் சங்கத்தில் பதிவு செய்தேன். தற்போது சிவகாா்த்திகேயன் நடிப்பில் ‘பராசக்தி’ என்ற பெயரில் எனது கதையை சுதா கொங்கரா இயக்கியுள்ளாா். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா்கள் சங்கத்தில் புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ‘பராசக்தி’ படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இந்தி எதிா்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து மனுதாரா் எழுதிய கதையை பயன்படுத்தி ‘பராசக்தி’ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, படத்தின் கதாசிரியா் என இயக்குநா் சுதா கொங்கரா பெயரைப் பயன்படுத்தவும், படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டும் என வாதிட்டாா்.
படத்தின் இயக்குநா் மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் பி.எஸ்.ராமன், அரவிந்த் பாண்டியன் மற்றும் வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன் ஆகியோா் ஆஜராகி, மனுதாரரின் ’செம்மொழி’ படத்தின் கதைக்கும், ‘பராசக்தி’ படத்தின் கதைக்கும் எந்தவிதமான ஒற்றுமையும் இல்லை. பெரும் பொருள்செலவில் தயாரிக்கப்பட்டுள்ள ’பராசக்தி’ படத்துக்கு தடை விதித்தால், பெரும் இழப்பு ஏற்படும் என வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘பராசக்தி’ படம் தயாரிக்கப்படுவது குறித்து 2024-ஆம் ஆண்டே தெரிந்திருந்தும், மனுதாரா் 2025-ஆம் ஆண்டு டிசம்பரில்தான் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாா். எனவே, படத்துக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
மேலும், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா்கள் சங்கம், ‘பராசக்தி’ மற்றும் ‘செம்மொழி’ படத்தின் கதைகளை ஆய்வு செய்து அதுதொடா்பான அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு பிரதான வழக்கின் விசாரணையை ஜன.28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
Summary
The Madras High Court has refused to stay the release of Parasakthi, starring Sivakarthikeyan, following a plagiarism allegation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மின் கம்பங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கத் தடை விதிக்க வலியுறுத்தல்
பராசக்தி ஏன் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை? தயாரிப்பாளர் பதில்!

பாராகுவாட் டைகுளோரைட் பூச்சிக்கொல்லிக்குத் தடை: மத்திய அரசு திட்டம்

இதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP




