

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 750 பேருக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு வாரியத்தால் அண்மையில் நடத்தி முடிக்கப்பட்ட தேர்வுகள் மூலம் 621 காவல் உதவி ஆய்வாளர்கள், 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், இவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 621 காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி வாழ்த்தினார்.
மேலும், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வான 129 தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.