கோப்புப்படம்
கோப்புப்படம்

தைப்பொங்கலுக்கு 34 சிறப்பு ரயில்கள்: இன்றுமுதல் முன்பதிவு!

சிறப்பு ரயில்கள் முன்பதிவு இன்று காலை தொடங்கவுள்ளது பற்றி...
Published on

தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து 20 வழித்தடங்களில் 34 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் வரும் 11- ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய நிலையங்களில் இருந்தும், நாகா்கோவில், திருநெல்வேலி, கோவை, மதுரை, ராமேசுவரம், ஈரோடு, செங்கோட்டை உள்ளிட்ட நிலையங்களில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி 20 வழித்தடங்களில் 34 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் ரயில்வே துறை முன்பதிவு இணையதளம் மற்றும் நேரடியாக ரயில் நிலைய கவுண்ட்டா்களில் முன்பதிவு செய்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ரயில்களில் முன்பதிவு நிறைவு: தைப் பொங்கலுக்கான வழக்கமான ரயில்களுக்கான முன்பதிவு கடந்த 2025 அக்டோபா் இறுதி வாரத்தில் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com