

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசின் கூட்டுறவு துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பொருட்களான பச்சரிசி , சக்கரை, கரும்பு உள்ளிட்ட வழங்குவது வழக்கம்.
அவ்வகையில் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் நியாய விலை கடை ஊழியர்களால் அரசு அறிவித்த அறிவுரையின்படி குறிப்பிட்ட தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 665 நியாய விலை கடை ஊழியர்கள் மூலம் சுமார் 3.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் வீடுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் தேதி, நேரம் உள்ளிட்டவைகள் குறிப்பிடப்படுவதால் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் பெறலாம்.
இன்றும் , நாளையும் மூத்த குடிமக்களுக்கான வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டமான தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசான ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் இன்றே வழங்கப்படுவதால் பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் இரண்டு பொருட்கள் வழங்குவது ஊழியருக்கான பணிச் சுமை குறைவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் பொங்கல் தொகுப்பு முன்கூட்டியே கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.