மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம்

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்!

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Published on

வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதலுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: வெனிசுலா மீது அமெரிக்கா தொடுத்துள்ள தாக்குதல் ஒரு சட்ட விரோத நடவடிக்கை. அது மட்டுமல்லாமல் அந்த நாட்டின் இறையாண்மையை காலில் போட்டு மிதித்துள்ளது அமெரிக்கா. வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோ, அவரது மனைவி சீலியா ஃபுளோரஸ் ஆகிய இருவரையும் கைது செய்திருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

சுதந்திரமான ஒவ்வொரு நாட்டையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொய்களைக் கூறி வரும் அமெரிக்கா, வெனிசுலா போதைப் பொருள் மையம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. வெனிசுலா உலகிலேயே மிக அதிகமான எண்ணெய் வளம் கொண்ட நாடு என்ற பின்னணியில் இந்த ஆக்கிரமிப்பை அமெரிக்கா செய்துள்ளது. இது அப்பட்டமான காா்ப்பரேட் ஆதரவு நடவடிக்கை.

அமெரிக்கா உடனடியாக போரை நிறுத்தி மீண்டும் வெனிசுலா இறையாண்மையுடன் செயல்படும் சூழலை உருவாக்க வேண்டும். அதிபா் நிக்கோலஸ், அவரது மனைவியையும் விடுவிக்க வேண்டும். பிரதமா் மோடி அரசு அமெரிக்காவின் தாக்குதலைக் கண்டிப்பதுடன், வெனிசுலாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com