

புதுச்சேரி தவெக கூட்டத்தில் கவனம் பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்எஸ்பி இஷா சிங், தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
2021 ஐபிஎஸ் பேட்ச்சை சேர்ந்த இவர், 2024இல் இருந்து புதுச்சேரியில் பணியாற்றி வந்தார். கரூர் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான பிறகு, முதல்முறையாக கடந்த டிசம்பவர் மாதம் புதுச்சேரியில் திறந்தவெளி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்துகொண்டார்.
புதுச்சேரி உப்பளம் துறைமுக அரங்கில் நடைபெற்ற தவெக பொதுக் கூட்டத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே பாஸ் கொடுக்கப்பட்ட 5,000 நபர்களை மட்டுமே காவல்துறையினர் உள்ளே அனுமதித்தனர். இந்த கூட்டத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்த புதுவை எஸ்எஸ்பி இஷா சிங், அரங்கின் நுழைவு வாயிலிலேயே நின்று மொத்த கூட்டத்தையும் சிறப்பாக கையாண்டார்.
பாஸ் இல்லாதவர்களை உள்ளே அனுமதிக்க முயன்ற தவெக பொதுச் செயலர் உள்ளிட்ட நிர்வாகிகளை கடிந்துகொண்ட காட்சி மூலம் இணையத்திலும் வைரலாகப் பரவினார். இருப்பினும், பெரும் விபத்துக்குப் பிறகு நடைபெற்ற புதுவை கூட்டத்தில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் சிறப்பாக செயல்பட்டதற்காக அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் இஷா சிங் பெற்றார்.
மேலும் இஷா சிங்கை புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் நேரில் அழைத்து பாராட்டும் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.