

திருப்பரங்குன்றத்தில் ஜாதி, மதம், கடவுள்களின் பெயரில் தமிழக மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் முயற்சி எப்போதும் ஈடுபடாது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் அமமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
டிடிவி தினகரனை மீண்டும் பொதுச்செயலாளராக தேர்வு செய்தும் - 2026 ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க அவருக்கு முழு அதிகாரம் வழங்கியும் அமமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 4,500 பேர் கலந்து கொண்டனர். அமமுக பொதுக்குழுவில் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில், கூட்டணி குறித்து முடிவெடுக்க தினகரனுக்கு முழு அதிகாரம். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மூலம் 2026 சட்டமன்ற தேர்தல் நியாயமானதாகவும் நேர்மையானதாகவும் நடைபெறுவதை இந்திய தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும்.
தமிழகத்திற்கென்று தனியாக சாதிவாரிக் கணக்கெடுப்பை திமுக அரசு நடத்த வேண்டும். திமுக ஆட்சியில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்களின் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும்.
திருப்பரங்குன்றத்தில் ஜாதி, மதம், கடவுள்களின் பெயரில் தமிழக மக்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் முயற்சியை எப்போதும் ஈடுபடாது.
கோவை மற்றும் மதுரை மாநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்திட மத்திய. மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலை திட்டம் மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மேலும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளராக மீண்டும் டிடிவி தினகரனை பொதுக்குழு தேர்வு செய்ததாக சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.