

பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு கனகசபைநகரில் உள்ள ஞானப்பிரகாசர் குளத்தில் தெப்ப உற்சவம் திங்கள்கிழமை(ஜன.6) இரவு வெகுசிறப்பாக நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன திருவிழாவின் போது நிறைவு நாளன்று சிதம்பரம் ஞானப்பிரகாசர் குளத்தில் தெப்போற்சவம் நடைபெற்று வருவது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது.
மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவ காலத்தின் முத்துப்பல்லக்கு திருவிழாவிற்கு அடுத்த நாளில் தெப்பம் அமைக்கப்பெற்று அதில் ஸ்ரீ நடராஜர் கோயிலின் ஸ்ரீ சந்திரசேகரர் எழுந்தருளி குளத்தை வலம் வரும் தெப்பல் உற்சவம் நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
இந்த நிலையில், மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவத்தை முன்னிட்டு ஜன.5-ம் தேதி திங்கள்ழமை இரவு 11 மணிக்கு தெப்பல் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
தெப்பல் உற்சவத்தில் நடராஜர் கோயில் உற்சவரான சிவகாமசுந்தரி அம்பாள் சமேத சந்திரசேகரர் எழுந்தருளி குளத்தை வளம் வந்து நீராழி மண்டபத்தில் வீற்று பக்தர்களுக்கு காட்சியளித்தார். நீராழி மண்டபத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.