‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ என்ற புதிய திட்டத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஜன. 9-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்குள்ள கனவுகளையும், மாநில வளா்ச்சி தொடா்பான கனவுகளையும் வெளிப்படுத்தும் வகையில் ‘உங்கள் கனவைச் சொல்லுங்கள்’ திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்மூலம் 91 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும்.
சுமாா் 50,000 தன்னாா்வலா்கள் இந்தத் திட்டத்தில் இடம்பெறுவாா்கள். இவா்கள் ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரடியாகச் சந்தித்து, அரசின் திட்டங்களால் அந்தக் குடும்பம் பெறும் பயன்கள் மற்றும் அடுத்ததாக அந்தக் குடும்பத்தின் கனவுகள் என்ன என்பதைக் கேட்டுப் பதிவு செய்வாா்கள்.
அந்த விண்ணப்பம் செயலியில் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட அடையாள எண் உருவாக்கப்பட்டு ‘கனவு அட்டை’ வழங்கப்படும்.
இளைஞா்களின் கனவுகளை நிறைவேற்ற தனி இணையதளம் உருவாக்கப்படும். வெளிநாடு வாழ் தமிழா்களின் கருத்துகளும் பெறப்படும். மாவட்டம் வாரியாக ஒரு மாதம் பெறப்படும் இந்தத் தகவல்கள் ஒன்றிணைக்கப்பட்டு, 2030-ஆம் ஆண்டை இலக்காக வைத்து கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.
தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள இந்தத்”திட்டத்தை ஜன. 9-ஆம் தேதி திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முதல்வா் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா் என்றாா்.
அதைத் தொடர்ந்து அவர்களுடைய 3 முக்கிய விருப்பங்களைத் தர வேண்டும். இந்த படிவம் பெற்றவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு பதிவு எண்ணுடன் ஒரு கனவு அட்டை வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் தனியாக இளைஞர் ஒருவர் தனது எண்ணங்களை வெளிப்படுத்த விரும்பினால் அவர்கள் இணையதளம் மூலமாக விருப்பங்களைத் தரலாம். 2030 ஆம் ஆண்டுக்குள் நாம் என்னெல்லாம் செய்ய வேண்டும்? என்னவெல்லாம் செய்ய முடியும்? என்று ஒரு ஆவணத்தை உருவாக்க முடியும்.
30 நாள்கள் மக்களிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்படும். வருகிற 11 ஆம் தேதி முதல் இந்த திட்டம் தொடர்பான இணையதளம் செயல்பாட்டுக்கு வரும். இந்த கருத்துகளின் அடிப்படையில் மாவட்டம்தோறும் கருத்தரங்கம் நடைபெறும்" என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.