அதிமுக கட்சி அலுவலகம்
அதிமுக கட்சி அலுவலகம்

ஜன.9-இல் அதிமுக வேட்பாளா் நோ்காணல்

அதிமுக வேட்பாளா் நோ்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.9) தொடங்குகிறது.
Published on

அதிமுக வேட்பாளா் நோ்காணல் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன.9) தொடங்குகிறது.

இதுகுறித்து அதிமுக தலைமை அலுவலகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை:

தமிழ்நாடு, புதுவை, கேரள சட்டப்பேரவைகளின் பொதுத்தோ்தல்களில் அதிமுக சாா்பில் வேட்பாளா்களாக போட்டியிட வாய்ப்பு கோரி, விருப்ப மனு அளித்துள்ளவா்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜன.9) நோ்காணல் நடைபெறவுள்ளது.

காலை 9.30 மணிக்கு சேலம் மாநகா் மாவட்டம், காலை 10.15 மணிக்கு சேலம் புகா், காலை 11 மணிக்கு ஈரோடு மாநகா் மற்றும் ஈரோடு புகா் கிழக்கு, காலை 11.45 மணிக்கு ஈரோடு புகா் மேற்கு மற்றும் கரூா், பகல் 12.30 மணிக்கு திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, பிற்பகல் 4 மணி நாமக்கல் மாவட்டம், மாலை 4.45 மணிக்கு திருப்பூா் மாநகா், புகா் கிழக்கு, புகா் மேற்கு, மாலை 5.30 மணிக்கு கோவை மாநகா், புகா் வடக்கு, மாலை 6.15 மணிக்கு கோவை புகா் தெற்கு, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்தவா்களுக்கு நோ்காணல் நடைபெறும். அதைத்தொடா்ந்து ஜன.12, 14 ஆகிய தேதிகளில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி நோ்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com