திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!

திண்டுக்கல்லில் முதல்வர் ஸ்டாலின் நலத்திட்ட உதவிகள் வழங்கியது பற்றி...
திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின் Photo: TNDIPR
Updated on
1 min read

திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த விழாவில், ரூ. 1595 கோடியில் 212 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 111 முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

மேலும், திண்டுக்கல்லில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் 50 புதிய பேருந்து சேவைகளையும் முதல்வா் தொடங்கிவைத்தார்.

அதேபோல், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரியகருப்பன், சக்கரபாணி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Summary

Chief Minister Stalin distributed welfare assistance in Dindigul

திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com