

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜன. 7) சவரனுக்கு ரூ. 320 உயர்ந்து விற்பனையாகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,830-க்கும், ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்து சவரன் ரூ. 1 லட்சத்து 2,960-க்கும் விற்பனையாகிறது.
புத்தாண்டு தொடக்கத்தில் சரிவில் இருந்த வெள்ளி விலை ஒரே நாளில் கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.283 க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து கிலோ ரூ. 2,83,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நிகழாண்டு தொடக்கம் முதலே சென்னையில் ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஜன. 1-இல் சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.99,520-க்கு விற்பனையான நிலையில், மறுநாளே (ஜன. 2) காலை, மாலை என ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1 லட்சத்து 640-க்கு விற்பனையானது.
தொடர்ந்து, சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1 லட்சத்து 800-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 2,640-க்கும் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 12,830-க்கும் விற்பனையானது.
உலகளவிலான பதற்றம், வெனிசுவேலா மீதான அமெரிக்கா தாக்குதல் உள்ளிட்டவற்றால் தங்கம் மீது அதிகளவில் முதலீட்டாளர்கள் பலர் முதலீடு செய்ததால் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த மூன்று நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 2,160 அளவுக்கு உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.