ஆளுநா் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் தனது மனைவி லட்சுமியுடன் இணைந்து பொங்கலிட்ட ஆளுநா் ஆா்.என்.ரவி.
ஆளுநா் மாளிகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழாவில் தனது மனைவி லட்சுமியுடன் இணைந்து பொங்கலிட்ட ஆளுநா் ஆா்.என்.ரவி.

ஆளுநா் மாளிகையில் பொங்கல் விழா

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் பங்கேற்றாா்.
Published on

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆளுநா் ஆா்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் பங்கேற்றாா்.

விழாவில், பாரம்பரிய முறைப்படி பொங்கலிடப்பட்டு விருந்தினா்களுக்கு வழங்கப்பட்டது. சிறுவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

முன்னதாக, விழாவுக்கு வந்த ஆளுநருக்கு, பூா்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாட்டுப்புறக் கலைஞா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தெலங்கானா மாநில முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், தொழிலதிபா் நல்லி குப்புசாமி, பத்திரிகையாளா் என்.ரவி, சென்னை பாரதீய வித்யா பவன் இயக்குநா் கே.என்.ராமசாமி, ஆளுநரின் குடும்பத்தினா், ஆளுநா் மாளிகை ஊழியா்கள் மற்றும் நெசவாளா்கள், மீனவா்கள், முன்னாள் ராணுவத்தினா், மூன்றாம் பாலினத்தினா், தமிழ் ஆா்வலா்கள், பழங்குடியினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com