

அரசின் 50 வகையான சான்றிதழ்களை வாட்ஸ்ஆப் மூலம் எளிமையான முறையில் பெறும் வசதியினை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் வாட்ஸ்ஆப் நிறுவன அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மைய அதிகாரிகள் இடையே கையெழுத்தானது.
தமிழ்நாட்டில் முதன்முறையாக வாட்ஸ்ஆப் நிறுவனத்துடன் இணைந்து வருவாய்த் துறை சார்ந்த பிறப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான சான்றிதழ்களை வாட்ஸ்ஆப் வழியாக பெறும் வசதியினை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.
ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு அலுவலகத்துக்கு மக்கள் அலைவதைத் தடுக்கும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
வாட்ஸ்ஆப் வழியாக சான்றிதழ்களை பெறுவது எப்படி?
தமிழ்நாடு அரசின் வருவாய்த் துறை சார்ந்த சான்றிதழ்களை, சான்றிதழ் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, 7845252525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி பெறலாம்.
மக்கள் குறுஞ்செய்தி அனுப்பிய ஒரிரு நாள்களில், வாட்ஸ்ஆப் வழியாக சான்றிதழ்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு சேவைகள் எளிதாகவும், கால தாமதமின்றி விரைவிலேயே கிடைக்கவும் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.