

ஜன நாயகன், பராசக்தி படங்களின் தணிக்கைச் சான்றிதழ் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் “சிபிஐ, அமலாக்கத் துறை, வருமான வரித் துறை வரிசையில் சென்சார் போர்டும் ஒன்றிய பாஜக அரசின் புதிய ஆயுதமாக மாறியுள்ளது. கடுமையான கண்டனங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு மத்திய தணிக்கைச் சான்றிதழ் வாரியம் தணிக்கைச் சான்றிதழ் வழங்காததால், பொங்கல் வெளியீட்டிலிருந்து ஜன நாயகன் ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தணிக்கைச் சான்றிதழ் வாரியம் மேல் முறையீடும் செய்துள்ளது.
இதனிடையே, சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்துக்கும் சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிக்கப்பட்டது. பராசக்தி நாளை (ஜன. 10) வெளியாகவுள்ள நிலையில், கடைசி தருணமாக இன்றுதான் யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.