ஜன நாயகனுக்கு யு/ஏ தணிக்கைச் சான்று வழங்க உத்தரவு!

ஜன நாயகனுக்கு யு/ஏ தணிக்கைச் சான்று வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
ஜன நாயகன் போஸ்டர்
ஜன நாயகன் போஸ்டர்படம்: X
Updated on
1 min read

ஜன நாயகன் திரைப்படத்துக்கு யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்று கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. டி. ஆஷா இன்று(ஜன. 9) தீர்ப்பளித்தார்.

கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் தயாரித்து ஹெச்.வினோத் இயக்கி இந்தத் திரைப்படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு இன்று (ஜன.9) வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, ஒரு படத்துக்கு தணிக்கை சான்று வழங்கும்வரை மறுஆய்வு செய்ய தணிக்கை வாரியத்துக்கு முழு அதிகாரம் இருப்பதாக வாதிடப்பட்டது.

‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்கு பரிந்துரைத்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியத் தலைவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், ஜன நாயகன் திரைப்படத்துக்கு யு/ஏ சான்று வழங்க, தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. டி. ஆஷா உத்தரவிட்டார்.

மேலும், படத்தை மறுஆய்வுக்கு அனுப்புவது ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்து, ஜன நாயகன் படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பிய உத்தரவையும் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

Summary

The Chennai High Court has ruled that a U/A censorship certificate should be issued to the film 'Jananaayagan'.

ஜன நாயகன் போஸ்டர்
ஜன நாயகனுக்கு மீண்டும் சிக்கல்: தணிக்கை வாரியம் மேல்முறையீடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com