பராசக்திக்கும் தணிக்கைச் சான்று கிடைக்கவில்லை!

பராசக்திக்கும் தணிக்கைச் சான்று கிடைக்காதது பற்றி...
படம் | பராசக்தி படக்குழுவின் சமூக ஊடகப் பதிவு
படம் | பராசக்தி படக்குழுவின் சமூக ஊடகப் பதிவு
Updated on
1 min read

பராசக்தி திரைப்படத்துக்கும் இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி படத்துக்கு, இன்னும் தணிக்கைச் சான்றிதழை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கவில்லை.

இதனால், பராசக்தி வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான டான் பிச்சர்ஸ் நாளை வெளியாகவிருப்பதை உறுதி செய்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தது.

ஆனால், பராசக்தி திரைப்படத்துக்கு இதுவரை தணிக்கைச் சான்றிதழை தணிக்கை வாரியம் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, விஜய்யின் ஜன நாயகன் திரைப்படத்துக்கு உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்க சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி இன்று உத்தரவிட்டார்.

ஆனால், தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் மத்திய அரசின் தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.

இந்த நிலையில், பொங்கல் அன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இரு பெரிய தமிழ் திரைப்படங்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Summary

Parasakthi also did not receive an censor certificate

படம் | பராசக்தி படக்குழுவின் சமூக ஊடகப் பதிவு
ஜன நாயகனுக்கு மீண்டும் சிக்கல்: தணிக்கை வாரியம் மேல்முறையீடு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com