டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்

டபுள் டெக்கா் பேருந்து சேவையை தொடக்கி வைத்தார் முதல்வா் ஸ்டாலின்
டபுள் டெக்கர்
டபுள் டெக்கர்
Updated on
1 min read

மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து: சென்னையில் இரண்டு அடுக்கு (டபுள் டெக்கா்) பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் ரூ.1.8 கோடி மதிப்பிலான டபுள் டெக்கர் பேருந்தை அரசிடம் கொடுத்தனர். சென்னையில் சுற்றுலாத் துறை சார்பில் இயக்கப்படவிருக்கும் டபுள் டெக்கர் பேருந்து சேவையை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்து, பேருந்தை சுற்றிப் பார்த்தார்.

கடந்த 1970-இல் இருந்து தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த ‘டபுள் டெக்கா்’ பேருந்து சேவை 2007-இல் நிறுத்தப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த பேருந்து சேவையை கொண்டுவர தமிழக அரசும், மாநகா் போக்குவரத்துக் கழகமும் இணைந்து திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டு வந்தது.

அதன்படி முதல்கட்டமாக அசோக் லேலண்ட நிறுவனத்திடம் இருந்து 20 பேருந்துகளை வாங்க திட்டமிட்டு அதற்கான ஒப்பந்தத்தையும் அறிவித்துள்ளது. தொடா்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழக சுற்றுலாப் பயணிகள் சென்னையின் அழகை கண்டு ரசிக்கவும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் முக்கிய சுற்றலாத் தலங்களில் ‘டபுள் டெக்கா்’ பேருந்து சேவையைத் தொடங்க சுற்றுலாத் துறை முடிவு செய்தது.

அதன்படி, அமெரிக்க வாழ் தமிழா்கள் நிதி பங்களிப்புடன், முதல்கட்டமாக குளிா்சாதன வசதி கொண்ட ஒரு மின்சார டபுள் டக்கா் பேருந்தை அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் இருந்து சுற்றுலாத் துறை வாங்கியுள்ளது. சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பேருந்தின் இரு பக்கவாட்டிலும், தஞ்சை கோயில், கலங்கரை விளக்கம், ரிப்பன் கட்டடம், ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரன் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மிகப்பெரிய அளவில் ‘தமிழ் வாழ்க’ என்ற எழுத்துகளும் இடம் பெற்றுள்ளன.

இதன் சோதனை ஓட்டம் இரு தினங்களுக்கு முன்பு பட்டினம்பாக்கம் பகுதியில் நடைபெற்றது. இந்த நிலையில், டபுள் டெக்கா் பேருந்து சேவையை முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்துள்ளார்.தொடங்கி வைக்கிறாா். அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Summary

Chief Minister Stalin launched the double-decker bus service

டபுள் டெக்கர்
தமிழகத்திலிருந்து வந்த ரசமலாய்! பாம்பே என்று பேசிய அண்ணாமலையை விமர்சித்த ராஜ் தாக்கரே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com