

மொழி உரிமைக்காக தனது உயிரைத் தியாகம் செய்தது திமுக, நமக்குள் பிளவுகளை அனுமதிக்காதீர்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் - 2026 விழாவில், முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கேற்று, அயலகத் தமிழர்களுக்கான விருதுகளை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், ”தமிழர்கள் கனவு கண்டால், அதை நாம் அடைந்தே தீருவோம். மொழி உரிமைக்காக தனது உயிரைத் தியாகம் செய்தது திமுக, நமக்குள் எந்த பிளவுகளும் ஏற்பட அனுமதிக்காதீர்கள். ஒரு தாய் மக்களாய் வாழ்வோம்.
உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்களாகிய நீங்களும், உங்கள் குடும்பத்தார்களும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
நாம் அனைவரும், யாராலும் பிரிக்க முடியாத தமிழின சொந்தங்கள். நாடுகளும் கடல்களும் நம்மைப் பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது. கீழடி கண்டுப்பிடிப்புகள் மூலம் நான்காயிரம் ஆண்டு பழமையான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது உறுதியாகியுள்ளது. கீழடியில் நெல்மணிகள் பயிரிடப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
மொழி சிதைந்தால் இனம் சிதையும். இனம் சிதைந்தால் பண்பாடு சிதையும். பண்பாடு சிதைந்தால் அடையாளம் போய்விடும், அடையாளம் போய்விட்டால் தமிழர்கள் எனச் சொல்லும் தகுதியை இழந்துவிடுவோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.