ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ராகுல் காந்தி கூடலூர் வருகை குறித்து...
Rahul Gandhi
ராகுல் காந்திIANS
Updated on
1 min read

காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி நாளை(ஜன. 12) பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்வுக்காக கூடலூர் வருகிறார்.

தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் அசீனா சையது தலைமையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பிரியங்கா காந்தியின் 54வது பிறந்தநாளையொட்டி மகளிர் காங்கிரஸ் சார்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வில் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார்

இந்த நிகழ்வில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களிடம் செல்வப்பெருந்தகை பேசுகையில், ”பள்ளியின் நூற்றாண்டு விழா நிகழ்வுக்காக ராகுல் காந்தி நாளை(ஜன. 12) கூடலூர் வருகிறார். ராகுல் காந்தியை வரவேற்க காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டு வருவதாகவும், இந்த ஆண்டு மகத்தான பொங்கலாக மக்களுக்கு மாற வேண்டும்” என்றார்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என அமைச்சர் இ. பெரியசாமி பேசியது தொடர்பாக பதில் அளித்த அவர், ”கூட்டணி தொடர்பாக அவருடைய கருத்தைதான் அமைச்சர் பெரியசாமி பேசி இருக்கிறார்.

ஆனால், கூட்டணிக்கு தலைமை முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமே. அவர்தான் அனைத்து முடிவுகளும் எடுப்பார்” எனத் தெரிவித்தார்.

”த.வெ.க. தலைவர் விஜய் சி.பி.ஐ. வலையில் சிக்கி இருக்கிறார், சிங்கம் வாயில் தானாக மாட்டிக்கொண்ட கதை சொல்வார்கள். அதுபோல, தமிழக அரசு சிறப்பாக விசாரணை மேற்கொண்டு வந்தது, இதில் மிரட்டல்கள் எதுவும் வரபோவதில்லை, நியாயமான விசாரணை நடந்திருக்கும்.

சிபிஐ விசாரணை என்ற பெயரில் பாஜக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டு அனைவரையும் துன்புறுத்தி, தற்போது விஜய்யை சென்னையில் இருந்து தில்லிக்கு அழைத்து இருக்கிறது.

பாஜக அரசியல் ஒப்பந்தத்திற்காக இது போன்ற முயற்சியை செய்கிறார்கள், ஒருபோதும் பாஜகவின் முயற்சி வெற்றி பெறாது.

பல மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டால் அவர்களின் ஊழல் வழக்குகள் அனைத்தும் மாறிவிட்டு புண்ணியம் செய்ததுபோல் மாற்றிவிடுவார்கள்” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் அமையுமா என்ற கேள்வி கேட்டபோது, ”தற்போது நடப்பதே காங்கிரஸ் ஆட்சிதான்” என அவர் பதில் அளித்தார்.

Summary

Congress senior leader and MP Rahul Gandhi is coming to Gudalur tomorrow (Jan. 12) for the school's centenary celebrations.

Rahul Gandhi
ஜன. 23-ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை! ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி கட்சித் தலைவர்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com