

பென்னாகரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், அனுமதியின்றி வைக்கப்பட்ட ஜனநாயகன் திரைப்பட பேனர்களைப் பேரூராட்சி ஊழியர்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி திரைப்பட நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய்யின் ஜனநாயகம் திரைப்படம் கடந்த 9ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், திரைப்பட தணிக்கைக் குழுவினர், சான்றிதழ் வழங்காததால் திரைப்படம் வெளியிடவில்லை. பொங்கல் பண்டிகைக்குத் திரைப்படம் வெளியாகும் என நடிகர் விஜய்யின் ரசிகர்கள் திரையரங்குகள், பொது இடங்களில் பேனர்கள் வைத்தனர்.
இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதிகளில் திரையரங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த ஜனநாயகன் திரைப்பட பேனர்களைப் பேரூராட்சி ஊழியர்கள் புதன்கிழமை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமாரிடம் கேட்டபோது..
பென்னாகரம் பேரூராட்சி பகுதிகளில் திரைப்பட பேனர்கள், கடைகளின் விளம்பர பேனர்கள் உள்ளிட்டவைகள் பேரூராட்சியின் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ளது. அவற்றால் பொது மக்களுக்கு,போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக புகார்கள் வரப்பெற்றுள்ளன.
பென்னாகரம் பகுதிகளில் உள்ள அனைத்து இடங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த பேனர்களை காவல்துறையினர் உதவியுடன் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு அகற்றி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.