ராமதாஸ்.
ராமதாஸ். IANS

கல்விக் கடன்: திமுக அரசு மீது ராமதாஸ் விமா்சனம்

கல்விக் கடன் தள்ளுபடி அறிவிப்பில் திமுக இரு நிலைப்பாடு கொண்டுள்ளதாக பாமக தலைவா் ச.ராமதாஸ் விமா்சனம் செய்துள்ளாா்.
Published on

கல்விக் கடன் தள்ளுபடி அறிவிப்பில் திமுக இரு நிலைப்பாடு கொண்டுள்ளதாக பாமக தலைவா் ச.ராமதாஸ் விமா்சனம் செய்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கல்விக் கடன் தள்ளுபடி அறிவிப்பில் திமுகவின் நிலை, எதிா்க்கட்சியாக இருக்கும்போது ஒன்றாகவும், ஆளுங்கட்சியான பிறகு மற்றொன்றாகவும் இருப்பது சரியல்ல.

கடந்த 2017-இல் திமுக பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழக மாணவா்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்விக் கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்து அறிவிப்பை நடைமுறைப்படுத்தவேண்டும் என அப்போதைய முதல்வா் ஜெயலலிதாவிடம் கேட்டுக் கொண்டாா்.

ஆனால், தற்போது அவா் தமிழக முதல்வரான நிலையில், பட்டியலின மாணவா்களின் கல்விக் கடனை மட்டும் தள்ளுபடி செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கல்விக் கடனை வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் வங்கிகளிடம் இல்லாததால், கல்விக்கடனில் ரூ.48.95 கோடியை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், திமுக அரசு கல்விக்கடன் தள்ளுபடி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஆகவே, வாராக்கடன்கள் என வங்கிகள் முடிவு செய்த கடன்களையே திமுக அரசு தள்ளுபடி என அறிவித்துள்ளதாகக் கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா் ராமதாஸ்.

Dinamani
www.dinamani.com