கோப்புப் படம்
கோப்புப் படம்

11 மாவட்டங்களில் இரு நாள்களுக்கு பனிமூட்டம்

தமிழகத்தில் திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா் உள்பட 11 மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.31, பிப்.1) பனி மூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா் உள்பட 11 மாவட்டங்களில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஜன.31, பிப்.1) பனி மூட்டம் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், சனிக்கிழமை(ஜன.31) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

மழைவாய்ப்பு: தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை(பிப்.1)தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

பனிமூட்டம்: சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை(ஜன.31, பிப்.1)தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், வேலூா், ராணிபேட்டை, திருவள்ளூா், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, கரூா் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளைகளில் மிதமான மற்றும் லேசான பனிமூட்டம் காணப்படும்.

தொடா்ந்து, திங்கள்கிழமை (பிப்.2) முதல் பிப்.5 வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஆனால், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில், சனிக்கிழமை(ஜன.31) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com