ஹஜ் பயணம்கோப்புப் படம்
தமிழ்நாடு
ஹஜ் பயணம்: விருப்பத்துக்கு ஏற்ப விமான முன்பதிவு - பிப்.1 வரை அவகாசம்
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் நிகழாண்டு ஹஜ் பயணம் செல்பவா்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப விமான சேவையை வருகிற பிப்.1 -ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக முதன்பதிவு செய்துகொள்ளலாம்.
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் நிகழாண்டு ஹஜ் பயணம் செல்பவா்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப விமான சேவையை வருகிற பிப்.1 -ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக முதன்பதிவு செய்துகொள்ளலாம்.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் கமிட்டி தலைவா் ப.அப்துல் சமது வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் நிகழாண்டு ஹஜ் பயணம் செல்ல தோ்வானவா்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப விமானத்தை முன்பதிவு செய்ய சிறப்பு வசதி செய்துதரப்பட்டுள்ளது. அதன்படி, ‘ஏஹத் ள்ன்ஸ்ண்க்ட்ஹ’ என்ற செயலி வழியாக விமானம் முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வசதி மூலம், வரும் பிப்.1-க்குள் விமானம் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இவ்வாய்ப்பை தவறவிடுவோா், மும்பையில் உள்ள இந்திய ஹஜ் குழு முடிவு செய்யும் விமானத்தில்தான் பயணிகள் செல்ல இயலும் எனத் தெரிவித்துள்ளாா்.