

மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்த நாளையொட்டி இன்று பெரம்பூர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு சென்னையில் அவரது வீட்டின் அருகே வெட்டி கொல்லப்பட்டாா். இதில், தொடா்புடைய பிரபல ரெளடிகளான நாகேந்திரன், பொன்னை பாலு உள்பட பலா் கைது செய்யப்பட்டனா்.
பொன்னை பாலுவின் தாயார் மறைவையடுத்து அவர் 5 நாள்கள் இடைக்கால ஜாமீனில் கடலூர் சிறையில் இருந்து வேலூருக்கு வந்துள்ளார்.
இதனிடையே இன்று ஆம்ஸ்ட்ராங்கின் பிறந்தநாளையொட்டியும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் குற்றவாளியான பொன்னை பாலு ஜாமீனில் வெளிவந்துள்ளதாலும் பெரம்பூர் பகுதியில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீடு உள்ள வேணுகோபால் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.