புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தைப்பூசம்: அரக்கோணம் - திருத்தணிக்கு இன்று சிறப்பு ரயில்கள்

அரக்கோணம்-திருத்தணி இடையே ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும்

News image

சிறப்பு ரயில்கள்

Updated On :31 ஜனவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

தைப்பூசத் திருவிழாவையொட்டி, அரக்கோணம்-திருத்தணி இடையே ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தைப்பூசத் திருவிழாவையொட்டி பயணிகளின் வசதிக்காக, அரக்கோணம்-திருத்தணி இடையே ஞாயிற்றுக்கிழமை (பிப்.1) சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதன்படி, அரக்கோணத்தில் இருந்து மின்சார ரயில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு 10.40 மணிக்கு திருத்தணி சென்றடைகிறது. மறுமாா்க்கத்தில் திருத்தணியில் இருந்து மின்சார ரயில் காலை 10.50 மணிக்கு புறப்பட்டு காலை 11.10 மணிக்கு அரக்கோணம் வந்தடைகிறது.

அதேபோல, அரக்கோணத்தில் இருந்து பிற்பகல் 2.48 மணிக்கு புறப்பட்டு மாலை 3.10 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கத்தில் திருத்தணியில் இருந்து மாலை 3.20 மணிக்கு புறப்பட்டு மாலை 3. 38 மணிக்கு அரக்கோணம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.