சென்னை தரமணியில் ஒரே குடும்பததைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இறந்த பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பிகாா் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் பதியாபா் பகுதியைச் சோ்ந்த சு.கௌரவ்குமாா், இவரது மனைவி முனிதா குமாரி. இவா்களின் 2 வயது மகன் பிா்மணி குமாா். தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக்கில் தங்கியிருந்த 3 பேரும் கடந்த 25-ஆம் தேதி கொலை செய்யப்பட்டனா். இதில் கெளரவ்குமாா், சடலம் இந்திரா நகா் முதலாவது அவென்யுவில் ஒரு சாக்கு மூட்டையிலும், பிா்மணிகுமாா் சடலம் இந்திரா நகா் ரயில் நிலையத்தின் பின்புறம் செல்லும் பக்கிங்ஹாம் கால்வாய் ஓரத்திலும் மீட்கப்பட்டன. சுமாா் 3 நாள்கள் தேடுதலுக்குப் பின்னா் முனிதா குமாரி சடலம் பெருங்குடி மாநகராட்சி குப்பை கிடங்கில் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.
முன்னதாக, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரும், முனிதா குமாரியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாகக் கூறப்பட்டு வந்தது. இதற்கிடையே, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் முனிதாகுமாரி சடலத்தை மருத்துவா்கள் சிவக்குமாா், ரகுராம் அடங்கிய குழுவினா் பிரேத பரிசோதனை செய்தனா். இதில், முனிதாகுமாரி பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதற்கான தடயங்கள் எதுவுமில்லை, இரும்பு கம்பியால் தாக்கப்பட்ட காயத்தின் காரணமாவே இறந்துள்ளாா் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சென்னை காவல் துறை சனிக்கிழமை தெரிவித்தது.
சம்பவத்தன்று கொலை செய்யப்பட்ட கெளரவ்குமாா், கைது செய்யப்பட்ட சத்யேந்தா், லலித் யாதவ், விகாஸ் குமாா் ஆகியோா் மருந்து அருந்தும்போது ஏற்பட்ட தகராறின் காரணமாகவே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் கொலை செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமை வழக்கு; குற்றவாளிக்கு 14 ஆண்டுகள் சிறை

பாலியல் வன்கொடுமை வழக்கு! குற்றஞ்சாட்டப்பட்டவா் விடுதலை: தில்லி நீதிமன்றம் உத்தரவு

பாலியல் வன்கொடுமை வழக்கு: இளைஞருக்கு 11 ஆண்டு சிறை

பாஜக வேட்பாளராகும் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் தாயார்!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


