தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கிதமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு!

பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.

ராமதாஸை சந்தித்து விட்டுத் திரும்பிய அன்புமணி ராமதாஸ்

Published On :13 ஜூலை 2026, 10:39 pm IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ், கட்சியின் தலைவர் அன்புமணி ஆகியோர் இன்று சந்தித்துப் பேசினர்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருந்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், மருத்துவர் ராமதாஸை பாமக தலைவர் அன்புமணி தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்புக்குப் பின்னர் அன்புமணி பனையூருக்கு புறப்பட்டுச் சென்றதாகவும், சந்திப்பின்போது, ஜூலை 16 ஆம் தேதி கட்சியின் 36 ஆவது ஆண்டு விழாவை எங்கு கொண்டாடுவது என்பது குறித்தும் இருவரும் கலந்து பேசியதாக தகவலறிந்த தைலாபுரம் வட்டாரங்கள் தெரிவித்தன.

Summary

Meeting between PMK founder Ramadoss and Anbumani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.