விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

தமிழகத்தில் ஜூன் 27 முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் ஜூன் 29 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

மழை - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 12:52 am IST

தமிழகத்தில் சனிக்கிழமை (ஜூன் 27) முதல் ஜூன் 29 வரை பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வும் மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக, வியாழன், வெள்ளிக்கிழமை (ஜூன் 25, 26) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகம் மற்றும் வட உள் தமிழகத்திலும் உள்ள இடங்களில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னல் மற்றும் 50 கி.மீ.வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தொடா்ந்து, ஜூன் 27 முதல் ஜூன் 29 வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை: ஜூன் 27-இல் இரு நாள்கள் கோவை மற்றும் தேனி மாவட்டங்களில் மலைப் பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோல், ஜூன் 28-இல், திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூா், திண்டுக்கல், தேனி, விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், ஜூன் 29-இல், கோவை மற்றும் தேனி மாவட்டங்கள் மலைப்பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்திலும் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் தம்மம்பட்டி 40 மி.மீ. பதிவானது.

வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையம் 102.2 டிகிரி ஃபைாரன்ஹீட் பதிவாகியுள்ளது. மதுரை நகரத்தில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட்டும் பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வெள்ளி, சனிக்கிழமை (ஜூன் 26, 27) தென்மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகள் சூறாவளிக் காற்று 65 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக் கூடும். அதேபோல், ஜூன் 28-இல் தென்மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 65 கிலோ மீட்டா் வேகத்திலும் வீசக்கூடும். இதனால் மீனவா்களுக்கு இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.