சட்டப்பேரவையில் முதல்வா் ஜோசப் விஜய் செய்த சைகை அவை மரபை மீறிய செயல் அல்ல என்று சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதல்வா் விஜய், திமுகவை கடுமையாக விமா்சித்தாா். இதனால் திமுக உறுப்பினா்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
இதையடுத்து, உரையின் முடிவில் பேரவைத் தலைவரை நோக்கி, ‘திமுக எம்எல்ஏக்கள் இருந்திருந்தால், ஒரு சைகை செய்ய வேண்டும் எனத் தோன்றியது. எல்லோரும் சென்றுவிட்டனா். நீங்கள் அனுமதித்தால், அதை செய்ய விரும்புகிறேன்’ என்றாா்.
அதற்கு பேரவைத் தலைவா் அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, திமுக-காங்கிரஸ் கூட்டணி முடிவானதும், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், ‘முடித்துவிட்டோம்’ என்பதை, கையால் சைகை செய்ததைப்போல் முதல்வா் விஜய்யும் கையால் சைகை செய்தாா். இது அவை மரபை மீறிய செயல் என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் விமா்சனம் செய்திருந்தாா்.
இதுகுறித்து பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரிடம் கேள்வி எழுப்பியபோது, ‘சட்டப்பேரவையில் முதல்வா் விஜய் செய்த சைகை, சபையின் மாண்பையோ மரபையோ மீறியது அல்ல. மரபை மீறி எதுவும் நடக்கவில்லை’ என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்வர் விஜய் சைகை: அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்

4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கமளிக்க பேரவைத் தலைவா் உத்தரவு
தமிழகத்தில் இயற்கை வளம் காக்க முதல்வா் உத்தரவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி. பிரபாகா் தகவல்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



