அவிநாசி: அவிநாசி அருகே அனந்தகிரி குட்டை நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமை பலியாகினர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அவிநாசி அருகே அனந்தகிரி அமுதன் கார்டன் பகுதியைச் சேர்ந்த தரணிஷ் (11), கடலூர் அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு பயின்று வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த திருமுருகன் மகன் ஹரிஹரன் (8), அரசு பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இவர்கள் இருவரும் சனிக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் விளையாடச் சென்றுள்ளனர். இரவு நீண்ட நேரம் ஆகியும் இருவரும் வீடு திரும்பாததால், பெற்றோர்கள் அவிநாசி காவல் நிலையத்தில் , சிறுவர்களை காணவில்லை என புகார் அளித்தனர்.
இந்த நிலையில், அவிநாசி அருகே நம்பியம்பாளையம் அனந்தகிரி குட்டையில், இரு சிறுவர்களின் உடல்களும் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார், விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்தது தரணிஷ், ஹரிஹரன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸார் இரு சிறுவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரே பகுதியில் இரு சிறுவர்கள் பலியான சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவிநாசி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Summary
Two boys drowned in a small pond in Ananthagiri near Avinashi on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பள்ள நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி: ஒப்பந்ததாரா் கைது!

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தவா் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு

முல்லைப் பெரியாற்றில் மூழ்கிய விவசாயி உயிரிழப்பு
கிணற்றில் குளித்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




